Tamilnadu
”எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
”அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு,” எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு மக்கள் தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரத்தை தாண்டும். ஆகம விதிகளின் படியே கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது.
அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருந்ததா? யார் அமைச்சர்? என்ற கேள்வி இருந்தது. ஆனால் இப்போது எப்படி இல்லை. மக்களுக்கு அறநிலையத்துறையை பற்றி நன்றாகவே தெரிகிறது.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. எதிர்பாராத நடக்கும் குற்றங்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அப்பாவி தொண்டர்களை தூண்டுவிட்டு தமிழ்நாட்டில் சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது. எச்.ராஜா ஒரு மதவாத சக்தி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!