Tamilnadu
“சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-
பேரவைத் தலைவர் அவர்களே, விண்வெளியில் உள்ள I.S.S. எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் வில்மோர் அவர்களும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.
இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ஃபால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பு : கன்னியாஸ்திரிகள் கைது சம்பவத்திற்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
“இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட அவமானம் அல்லவா?” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக அறிவிக்க போவது எப்போது? : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!
-
ஒன்றிய அரசின் அலட்சியமே ரயில் விபத்துகளுக்கு காரணம் : மக்களவையில் திமுக MPக்கள் குற்றச்சாட்டு!
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!