Tamilnadu
”விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள்” : சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, ”திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முன்பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் விரைவில் வழங்கப்படும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துணை மின் நிலையங்களில் 250 துணை மின்னிகளுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள துணை மின் நிலையங்களுக்கு திட்ட அனுமதி தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் 1599 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் தொகுதியில் 502 மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 5 துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!