Tamilnadu
‘தமிழர் நிதி நிர்வாகம் - தொன்மையும் தொடர்ச்சியும்’ : முதலமைச்சர் வெளியிட்டுள்ள ஆவண நூலின் சிறப்புகள் இதோ!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.03.2025) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலினை வெளியிட்டு, இதற்கான சிறப்பு இணையப் பக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல் வெளியீடு சங்ககாலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதிநிர்வாகச் சிறப்புகளின் பெருந்தொகுப்பாகவும் வரலாற்று ஆவணமாகவும் ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலனிய கால நிதிநிர்வாக நடைமுறைகள், நவீன தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்துள்ள இந்நூல் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழ்நாட்டின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.
இந்த ஆவண நூலில், பொருளியல்,வரலாற்றுத் துறைகளைச் சேர்ந்த தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இச்சிறப்புமிக்க நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட, மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு இணையப் பக்கத்தை தொடங்கி வைத்தல்
‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலையொட்டி சேகரிக்கப்பட்ட, நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஒளிப்படங்கள் அனைத்தும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகச் சிறப்பு இணையப் பக்கத்தில் ( https://www.tamildigitallibrary.in/budget ) தொகுக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு இணையப் பக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு எனப் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள இவை உதவும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலை மேற்கண்ட இணையப் பக்கத்தில் வாசிக்கலாம்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!