Tamilnadu
”உன்னை தொலைத்து விடுவேன்” : மாஃபா பாண்டியராஜனை மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க பல அணிகளாக உடைந்துவிட்டது. தற்போது எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க என்று எல்லோரும் போட்டி போட்டு கூறிவருகிறார்கள்.
தற்போது தேர்தல் நேரம் தொடங்கி விட்டதால் அ.தி.மு.கவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது தலைகாட்டி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் மீண்டும் கோஷ்டி மோதல் உருவெடுத்துள்ளது. செங்கோட்டையன் ஒரு பக்கம் பழனிசாமிக்கு தலைவலையை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாஃபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது அ.தி.மு.கவிற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, " கட்சியை காட்டிக் கொடுத்தவன் மா.பா. பாண்டியராஜன். எனக்கு கட்சியில் காலில் விழுந்த வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு உள்ளது?.
நீ செய்வது எல்லாம் பார்த்து கொண்டு இருக்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல. உன்னை தொலைத்து விடுவேன். நான் அ.தி.மு.க-வின் குறுநில மன்னன்.” என பேசியுள்ளார்.
அ.தி.மு.க-வை வளர்ப்பதற்கு பதில் அக்கட்சி தலைவகள் ஒருவர் மாறி ஒருவர் வசைபாடி வருவது சாதாரண தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!