Tamilnadu

பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஆட்டோ ரிக்‌ஷாக்கள்,வாடகை கார்களில் QR குறியீடு : முழு விவரம் என்ன ?

சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஆபத்தான நேரங்களில் காவல்துறையை எளிதில் அணுகும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடுகளை வழங்கினார்.

இது குறித்து பேட்டியளித்த, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், "வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்பவர்கள் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சம் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது உடனடியாக காவல்துறை எஸ் ஓ எஸ் செயலியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்து அருகே உள்ள ரூந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவருக்கு உடனடியாக உதவி செய்யப்படும்.

QR குறியீட்டில் செய்தியில் அந்த வாங்கம் பற்றிய அனைத்து தகவல்களும் வந்துவிடும் வாகன ஓட்டுனர் பற்றியும் அனைத்து தகவல்களும் வந்துவிடும். அதை வைத்து அந்த வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம் ஓட்டுநர் உள்ளிட்ட தகவல்களை எளிதில் காவல்துறையினர் அறிய இந்த QR குறியீடு உதவிகரமாக அமையும்.

சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த QR குறியீட்டை ஓட்டுவது கட்டாயமாகப்பட்டுள்ளது. QR குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ரோந்தின் போது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

Also Read: “மொழித்திணிப்பால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு நம் பக்கத்திலேயே இருக்கிறது” -முதல்வர் எச்சரிக்கை (மடல்-09)