Tamilnadu

"இந்தியாவின் சிறந்த மாடல் தமிழ்நாடு மாடல்தான்" - இங்கிலாந்து கிங்க்ஸ் பல்கலை. பேராசிரியர் புகழாரம் !

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கிங்க்ஸ் பல்கலைகழகத்தில் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் குறித்து வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோவை The Wire இணையதளம் நேர்காணல் செய்திருந்தது. கிறிஸ்டோப் ஜெபர்லோவை இந்திய அரசியலில் நடைபெற்று வரும் மாற்றங்கள் பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நேர்காணலில் தமிழ்நாடு குஜராத் பீகார் ஆகிய மூன்று மாநிலங்கலைப் பற்றியும் அம்மாநில சமூக பொருளாதார திட்டங்கள் எதிர்கால இந்தியாவின் சர்வதேச பொருளாதார பாதையை மாற்றியமைக்க உள்ளன ? எனபது பற்றியும் அவர் சமர்பித்துள்ள ஆய்வறிக்கை குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கிறிஸ்டோப் ஜெபர்லோ, மோடி தன்னுடைய ஆட்சியில் மாய்ந்து மாய்ந்து குஜராத் முழுக்க நவீன சாலைகள் கொண்டு வந்தும், தமிழ்நாடு போலவே உள்கட்டமைப்புகளை கொண்டு வந்தும் கூட குஜராத் இன்னும் தமிழ்நாடு அளவு முன்னேறாததை பற்றி கூறியுள்ளார்.

அதோடு, கல்வியாக இருக்கட்டும், தனி நபர் வருமானமாக இருக்கட்டும், ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்தவொரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது கூறியுள்ள அவர், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூக நலன் திட்டங்களை பாராட்டியுள்ளார்.

அதோடு கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுக்கென்று ஒரு மாடல் இருக்குமென்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைப்பு : The Wire இணைய இதழ் குற்றச்சாட்டு!