Tamilnadu
கோவில் அனைவருக்கும் பொதுவானது, எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமம் கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் !
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த மாரியம்மன், அங்காளம்மன் மற்றும் பொன் காளியம்மன் கோவில்களில் இருந்து, பொன் காளியம்மன் கோவிலை தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பொன் காளியம்மன் கோவில் தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள் என்றும், மற்ற கோவில்கள் வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதியை நிலைநிறுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்று கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், அவர் தனது உத்தரவில், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து பக்தர்களும் கோவிலை நிர்வகிக்கலாம், வழிபடலாம் எனத் தெரிவித்துள்ளார். அதோடு சாதி என்பது மத பிரிவு அல்ல, சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மத பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் பிரிவனைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு பெரும்பாலான பொதுக்கோவில்கள், குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமம் கோர முடியாது. கோவிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!