Tamilnadu
கச்சத்தீவு பற்றி நீங்கள் பேசாதீர்கள் : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி!
”மீனவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை என்றாலும் வழிப்போக்கர்கள் கூறுவது போன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,” ஒரு பிரச்சனை குறித்து முதலமைச்சரிடமோ அல்லது தலைமைச் செயலாளரிடமோ ஆலோசனை நடத்தாமல் அடிக்கடி டெல்லி சென்று வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அவருக்கு ஆளுநர் பணி முடிவடைந்து, பணி நீட்டிப்பான லீவ் ப்ளேஸில் இருந்து வருகிறார். இதனால் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து தமிழ்நாட்டில் பிரச்சனை இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அப்படி பிரச்சனைகள் இருந்தால் அதை ஆளுநர் கூறினால் தமிழ்நாட்டு மக்களும் தெரிந்து கொள்வார்கள்தானே.
இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இந்தியாவை பெருமையாக நினைத்தது. ஆனால் தற்போது வெளியுறவு கொள்கையில் இந்திய அரசு வெற்றி அடையவில்லை என்றாலும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனால்தான் இந்திய அரசு மீனவர்கள் கைது விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கப்பற்படையை அனுப்பாமலும் அண்டை நாடான இலங்கையை கட்டுப்படுத்த முடியாத சூழலில் உள்ளது.
மீனவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிமை இல்லை என்றாலும் வழிப்போக்கர்கள் கூறுவது போன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கு என்ன செய்யலாம் என ஆளுநர் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டுவதே ஆளுநருக்கு வேலையாக உள்ளது. தனது பதவியை நிலை நாட்டுவதற்காகவே இதுபோன்று செயல்படுகிறார் ஆளுநர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : இதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு - பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
-
தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!