Tamilnadu
நாகை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.423.18 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் இந்த விழாவில் பேசும்போது, நாகை மாவட்டத்திற்கான ஆறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
முதல் அறிவிப்பு :- வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் இருக்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையில், தென்னடார் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில், 250 கோடி ரூபாய் செலவில், புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்! காவிரி டெல்டா பகுதியில், அனுமதிக்கத் தகுந்த வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு :- விழுந்தமாவடி, வானவன்மகாதேவி மற்றும் காமேஸ்வரம் ஆகிய மீனவ கிராமங்களில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு :- தெற்குப் பொய்கைநல்லூரிலும் - கோடியக்கரையிலேயும் - தலா 8 கோடியே 50 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில், மூன்று தளங்கள் கொண்ட பல்நோக்குப் பேரிடர் மையங்கள் கட்டப்படும்!
நான்காவது அறிவிப்பு :- நாகப்பட்டினம் நகராட்சியின் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகராட்சி கட்டடம் 4 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு :- நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் வட்டங்களில் இருக்கின்ற பல்வேறு வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களின் மதகுகளும், இயக்கு அணைகளும் 32 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும்!
ஆறாவது அறிவிப்பு :- உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல், பல மதங்களைச் சேர்ந்த மக்களும் வருகை தருகின்ற நாகூர் தர்கா, இந்த நாகை மாவட்டத்தில்தான் இருக்கிறது. இங்கே இருந்து இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு செய்தியை ஆறாவது அறிவிப்பாக வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக - சென்னை விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும்!
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!