Tamilnadu

"தமிழ்நாட்டிற்கான நிதி எங்கே?" : ஒன்றிய அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க மாணவர் அணி!

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தரமுடியும் என ஆணவத்துடன் பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை IIT-யில் நிகழ்ச்சி ஒன்றியல் தர்மேந்திர பிரதான் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் தனது கருத்துக்கு கடும் கண்டங்கள் எழுந்ததை அடுத்து IIT நிகழ்ச்சியல் பங்கேற்பதை தர்மேந்திர பிரதான் தவிர்த்து தமிழ்நாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இதனால் IIT நிகழ்ச்சியல் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் பங்கேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தி திணிப்பையும், தமிழ்நாட்டிற்கு நிதி தரமறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க மாணவர் அணி மற்றும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது‌.

இந்த கருப்பு கொடி போராட்டத்திற்கு தி.மு.க மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பேசிய எழிலரசன் எம்.எல்.ஏ,”ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி - சமஸ்கிருதத்தை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. கல்வி நிதியை வழங்க மாட்டோம் என ஆணவத்தோடு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசுகிறார்.

இவரின் இந்த ஆணவப் போக்கை கண்டித்து பிப். 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. தர்மேந்திர பிரதான் சென்னை வருவதாக இருந்தது. அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்புகள் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தனது வருகையை ரத்து செய்து உள்ளார்.

இன்று சென்னை IIT நிகழ்ச்சியில் கல்வி இணை அமைச்சர் கலந்து கொண்டார். இந்நிலையில்தான் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் கருப்பு கொடி போராட்டத்தை நடத்துகிறோம். ஒன்றிய அரசின் சர்வாதிகபோரத்தை போக்கை கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசு சர்வாதிகாரத்திறகும் மிரட்டலுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இந்தியாவிலேயே திறமையான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் வடிவேலு புகழாரம்!