Tamilnadu
தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்தாலும் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொல்வது என்ன?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நல்லிகோட்டை கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20, லட்சம் மதிப்பீட்டில். சமுதாயக்கூடம் கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து நல்லிக்கோட்டை கிராமத்தில் சமுதாயக்கூடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்துவைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ”பெண்கள் பயன்பெறும் வகையில் நமது மாவட்டத்தில் விவசாய சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
ஒன்றிய அரசு எவ்வளவுதான் தமிழ்நாட்டை வஞ்சித்தாலும் நமக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. நம்ம பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடியை கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது.
தமிழ்நாட்டை எவ்வளவுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்தாலும், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக எப்போதும் இருக்கும். இதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!