Tamilnadu

”தன்னை கொடுங்கோலராக காட்டிக் கொள்ளும் ஜக்தீப் தன்கர்” : டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி!

”ஹிட்லரின் மனப்பான்மையை குடியரசு தலைவரின் பேச்சு காட்டுகிறது. கொடுங்கோலர்கள் பலரும் இதைத்தான் செய்தார்கள். துணைக் குடியரசுத் தலைவர் தன்னை ஒரு கொடுங்கோலர் என காட்டிக் கொள்வதற்காக இப்படி சொல்லி இருக்கிறார்.” என தி.மு.க தலைமை செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய டி.கே.எஸ் இளங்கோவன்,” தேசியக் கல்விக் கொள்கை என்பது ஒரு சட்டம் அல்ல, அது எங்கள் மீது திணிக்க முடியாது. கல்வி என்பது அரசியலமைப்பு சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வரமுடியும்.

ஹிட்லரின் மனப்பான்மையை குடியரசு தலைவரின் பேச்சு காட்டுகிறது. கொடுங்கோலர்கள் பலரும் இதைத்தான் செய்தார்கள். துணைக் குடியரசுத் தலைவர் தன்னை ஒரு கொடுங்கோலர் என காட்டிக் கொள்வதற்காக இப்படி சொல்லி இருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி கிடைக்கும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய மிரட்டி இருக்கிறார். மேலும் கல்வியில் அரசியல் செய்வதாக? கூறியுள்ளார்.இதற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை நேற்று தெளிவாக விளக்கி இருக்கிறார்.

மதத்தை பிரச்சாரம் செய்ய, மனுதர்மத்தை பிரச்சாரம் செய்ய, வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் திணிக்க ஒரு ஏற்பாடாக புதிய கல்விகொள்கையை கொண்டு வர பார்க்கிறார்கள். இதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் எண்ணமாக இருந்து வருகிறது. நேர்மையற்ற ஒரு ஆட்சியில் இருக்கும் போது திருட்டுத்தனமாக சிலவற்றை பா.ஜ.க அரசு செய்ய முயற்சி செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!