Tamilnadu
776 புதிய குடியிருப்புகள் : வட சென்னை வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (31.1.2025) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னைபெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், கணேசபுரம் மேம்பாலம், ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகள், தண்டையார்பேட்டை பேருந்து நிலையம் என 474 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 திட்டப் பணிகளின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் ரூ.59 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் தனி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிரப்புகளுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் சென்னை, வில்லிவாக்கம், பாடி மேம்பாலத்தின் கீழ் சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் ரூ.53.50 கோடியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக அமையத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளிடம் வீட்டின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், திரு.வி.க.நகர் கன்னிகாபுரத்தில் ரூ.12.69 கோடி மதிப்பீட்டில் 3.75 ஏக்கர் பரப்பளவில் 20,315 சதுர அடியில் தரைதளம் மற்றும் 2 தளங்களாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதனைத் தொட்ர்ந்து, கன்னிகாபுரத்தில் 12.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.75 ஏக்கர் பரப்பளவில் 20,315 சதுர அடியில் தரைதளம் (ம) 2 தளங்களாக கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!