Tamilnadu

”தமிழ்நாடு தொழில்தறையில் பெண்களின் பங்களிப்பை உற்றுநோக்கும் உலகநாடுகள்” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றம் 2025 மாநாட்டில் வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரத்திற்காக STEM துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் தொழில்நுட்ப மையத்தில் பெண்கள் Woenaean in Tocha tab என்ற அமர்வில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தி உரையாற்றிய தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி ராஜா அவர்கள், திராவிட நாயகர் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் தொழில்துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று சாதனை படைத்து வருவது பற்றிகுறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை வருமாறு:-

“பெண்களை அதிக அளவில் ஊக்குவித்து, பணியாளர்களாக ஈடுபடுத்துவதில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. இந்த குறிப்பிடத் தக்க சாதனை, 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதிக்காக போராடி, பெண்களை பொருளாதார வல்லமைமிக்க சமமான பங்குதாரர்களாக மாற்றிய திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், புதுமைப்பெண், விடியல் பயணம் தோழி விடுதிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற முன்னேற்றத் திட்டங்களுடன் தமிழ்நாடு இந்த மரபைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது, இதன் மூலம் பெண்கள் நம்முடைய பொருளாதார முன்னேற்றத்தின் முன்னணியில் இருப்பதை உறுதி செய்கிறது.

உலகம் தமிழ்நாட்டின் வெற்றியைகவனிக்கத் தொடங்கியுள்ளது, மேலும் நாங்கள் எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பெருமையை அடைகிறோம், இது நாங்கள் விரும்பும், inclusive growth எனும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பார்வையைவலுப்படுத்துகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாஅவர்கள் உரையாற்றினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றம் 1025 மாநாட்டில் வளர்ந்து வரும் உலகப் பொருளாதாரத்திற்காக STEM துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், தொழில்நுட்ப மையத்தில் பெண்கள் Women in Tech Hub என்ற அமர்வில் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா உரையாற்றினார்.

Also Read: ‘திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன?’ என்பதற்கு, இந்த கூட்டமே பதில்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!