Tamilnadu
கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மையத்தின் மேம்பாட்டிற்கு ரூ. 12 கோடி நிதி : அரசாணை வெளியீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மருத்துவத் துறையை பல வகையில் மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், தற்போது சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் நிதி கூடுதலாக ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடைய 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை அறிவித்தார்.
1948ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தின் மருந்துகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பு திறன் அறிய நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரியல் பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறை நிறுவப்பட்டது.
தமிழ்நாடு அரசு மருந்துகள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடமிருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்து மாதிரிகள் வாடிக்கையாகவும் இடை சோதனைக்காகவும் பெறப்பட்டு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
மருந்து சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய இரத்த கண்காணிப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மருந்து சார்ந்த தீய விளைவுகள் மற்றும் புகார்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது. மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன் படி அட்டவணை C மற்றும் C1 உட்பட ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்து மாதிரிகளை மருந்தியல் தனிவரைவின் படி முழுமையான ஆய்வு புரிந்து தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மருந்தியல் அரசு பகுப்பாய்வாளரால் முடிவு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த மருந்துகள் தர கட்டுப்பாடு நவீன ஆய்வகத்தினால் இந்திய மற்றும் யுஸ் பார்மகோப்பியா படி மருந்துகளின் விரிவான ஆய்வின் மூலம் அவற்றின் அத்தியாவசியமான தரங்கள் பராமரிக்கப்பட்டுவருகிறது.
1. அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் முக்கியமாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடையும்.
2. இந்த நவீன கட்டமைப்புடன் தர மேலாண்மை மிக்க ஆய்வகத்திடமிருந்து நம்பகதன்மையுடன் உள்ள ஆய்வறிக்கை பெறப்படும்.
3. இது மருந்துகளுக்கும் மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய தீவிர எதிர்மறை விளைவுகள், ரத்த பரிமாற்று எதிர்வினைகள், தடுப்பூசிகளுக்குப் பிறகு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும், இதனால் நோயின் காரணமாக உருவாகும் வியாதி, மரணத்தை மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலத்தை குறைத்து, நோயினால் உண்டாகும் பொருளாதார சுமையைக் குறைக்கும்.
இந்த முயற்சி தமிழ்நாடு அரசின் மாநிலம் முழுவதும் உயர் தரமான மருத்துவ வசதி மற்றும் மருந்து பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டை மேற்கோள்காட்டுகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!