Tamilnadu

தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் - தொழில் முனைவோருக்கான ChatGPT : தமிழ்நாடு அரசின் சார்பில் பயிற்சி!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தொழில் சார்ந்த வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், சென்னையில் 3 நாட்கள் பயிற்சி வகுப்பும், கோவையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது.

சென்னையில் நடைபெற இருக்கும் பயிற்சி வகுப்பில் “பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள், சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு), கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி, ​​குதிரைவாலி தினை பிரவுனி, ​​கருப்புகோவ்னி தினை பிரவுனி, ​​பல தினை வால்நட் பிரவுனி, ​​டேட்ஸ் தினை பிரவுனி, ​​கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.

தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வருகின்ற ஜனவரி 31ஆம் நாள் நடைபெற இருக்கும் ஒரு நாள் பயிற்சி வகுப்பில், ‘தொழில்முனைவோருக்கான ChatGPT’ என்ற தலைப்பிலான அமைப்பு முறைகள் கற்றுத்தரப்பட உள்ளன.

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, ChatGPT-ஐ பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த பயிற்சி வகுப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான தகவல்களை www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: ”மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் வரை போராட்டங்கள் தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!