Tamilnadu

தமிழ்நாடு அரசின் 10 விருதுகள்... விருதாளர்களுக்கு வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அய்யன் வள்ளுவரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 2025-ம் ஆண்டிற்கான அய்யன் வள்ளுவர் மற்றும் 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

விருது மற்றும் விருது பெற்றோரின் பட்டியல் வருமாறு :

1. திருவள்ளுவர் தினத்தையொட்டி 2025-ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதை செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு.படிக்கராமுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை விடுதலை இராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

3. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை எல்.கணேசன் சார்பில், அவரது மகன் அண்ணா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

4. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

5. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதை கே.வி.தங்கபாலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

6. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதை கவிஞர் கபிலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

7. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வகணபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

8. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருதை முத்து வாவாசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

9. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதை மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

10. தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை வே.மு.பொதியவெற்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவர்களுக்கு பெற்றோர்களுக்கு பொன்னாடை, பதக்கம், விருது மற்றும் காசோலை வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : திருப்பரங்குன்றம் கார்த்தி முதலிடம்... முழு விவரம் உள்ளே !