Tamilnadu

”பீப் கடை போடக்கூடாது” : மிரட்டிய பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ்!

கோவை மாவட்டம், உடையாம்பாளையம் பகுதியில் சாலையோரமாக தள்ளுவண்டியில் பீப் கடையை தம்பதி ஒருவர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கடைக்கு வந்த பா.ஜ.க பிரமுகர் சுப்ரமணி என்பவர், இங்கு பீப் கடை போடக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இவர் மிரட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் தம்பதிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், கடையை எடுக்க சொல்லி என்னை பல முறை பா.ஜ.க சுப்ரமணி என்னை மிரட்டினார்.

எல்லோரிடம் அனுமதி பெற்றுதான் நான் கடை வைத்துள்ளேன். அதே இடத்தில் கடை போட மீண்டும் அனுமதி கொடுக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தனர். பின்னர், பா.ஜ.க பிரமுகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “பாலியல் குற்றாவாளி ‘சார்களின்’ சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்” - அமைச்சர் சிவசங்கர் காட்டம்!