Tamilnadu

யார் அந்த SIR?... பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! - இணையத்தில் வைரலாகும் அதிமுக ஆட்சியின் அவலம்!

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் என பல திட்டங்கள் மகளிர் நலனுக்காக திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, மகளிருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் மகளிருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்று எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்பி வருகிறது. குறிப்பாக அதிமுக இந்த வதந்தியை வேண்டுமென்றே பரப்பி வருகிறது. குறிப்பாக அண்ணா பல்கலை.-யில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், போலீசும் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும் வேண்டுமென்றே அரசை குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பரப்பி வருகிறது. மேலும் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநில பட்டியலில் முதன்மையாக விளங்கும் தமிழ்நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவதூறு பரப்பி வருகிறது அதிமுக.

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் (2019) நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த விவகாரம் தொடர்பாக செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பின்வருமாறு :

யார் அந்த SIR?... பொள்ளாச்சியே சாட்சி!

=> 2019 :

பிப்ரவரி 12, 2019 - பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார்

பிப்ரவரி 24 - மேலும் ஒரு பெண்ணிடமிருந்து புகார்

பிப்ரவரி 26 - பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் குற்றவாளிகள் தன்னைத் தாக்கியதாக புகார்

பிப்ரவரி 26 - செந்தில், பாபு, மணி, ராஜகோபால் நால்வர் கைது. ஆனால் 'பார் நாகராஜன்' (பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்) பெயரை காவல்துறையினர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை.

மார்ச் 4 - இதில் அதிமுக கட்சியை சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என திருநாவுக்கரசு ஆடியோ வெளியீடு

மார்ச் 5 - திருநாவுக்கரசு கைது

மார்ச் 5 - நக்கீரன் ரிப்போர்ட்டர் அருள் குமாரை பொள்ளாச்சி ஜெயராமன் மிரட்டினார்

மார்ச் 6 - கோவை எஸ்.பி பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட புகார்தாரரின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட்டார்.

மார்ச் 10 - சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் மூவர் கைது, ரிமான்ட்

மார்ச் 11 - ‘பார் நாகராஜன்' அதிமுகவிலிருந்து நீக்கம்

மார்ச் 12 - கனிமொழி தலைமையில் திமுக போராட்டம்

மார்ச் 13 - வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றம்

மார்ச் 15 - ஒரே நாளில் 100க்கும் அதிகமான பெண்கள் புகார்

மார்ச் 15 - பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டதற்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம்

மார்ச் 17 - பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பில் நிருபர்களை மிரட்டினார்.

ஏப்ரல் 9 - அதிமுக அரசை கண்டித்து கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நவம்பர் 3 - குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை மு.க.ஸ்டாலின் கண்டித்து அறிக்கை

=> 2021 :

ஜனவரி 6 - அதிமுக பொள்ளாச்சி மாணவர்அணி செயலாளர் அருளானந்தம் உட்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது.

ஜனவரி 6 - அதிமுகவைச் சேர்ந்த அருளானந்தம் கட்சியிலிருந்து நீக்கம்

ஜனவரி 10 - கனிமொழி தலைமையில் திமுக மீண்டும் போராட்டம்

ஜனவரி 11 - அதிமுகவைச் சேர்ந்த ஹரோன் பால் மற்றும் பாபு, 2 பேர்களை எப்ஜரில் சேர்க்காமல் அவர்களை காவல்துறை காப்பாற்றுகிறது என 'தி ஹிந்து"வில் செய்தி வெளியீடு

ஜனவரி 11 - பால் என்பவரை சிபிஐ கஸ்டடி எடுத்து விசாரணை.

பிப்ரவரி 19 - இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா என்பவரது கார் பறிமுதல்

பிப்ரவரி 19 - பல பெண்களை மிரட்டி முன்னாள் அதிமுக சேர்மன் கிருஷ்ணகுமாரிடம் அனுப்பியதாக அருளானந்தம் ஒப்புதல் வாக்குமூலம்

இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு மந்தமாக செல்கிறது.

Also Read: ”இது உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : மகளிர் சுய உதவிக்குழுக்களை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி!