Tamilnadu
7 பேருக்கு மறுவாழ்க்கை கொடுத்து உயிரிழந்த இளைஞர் : நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரேம்குமார். இவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு பிரேம் குமார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளை சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால், மற்றவர்களின் மறுவாழ்க்கைக்கு உதவும் என பெற்றோர்களிம் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்த பிரேம் குமார் பெற்றோர், தனது மகனின் உடல் உறுப்புகனை தானமாக வழங்க அனுமதி அளித்தனர். பிறகு இளைஞரின் கிட்னி, கல்லீரல், இதயம் நுரையீரல், இரு கண்கள் தானமாக பெறப்பட்டது.
Also Read
-
“பா.ஜ.க.வின் இன்னொரு கிளை தான் த.வெ.க ; முதல்முறையாக உண்மையை சொன்ன விஜய்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
பாதாளச் சாக்கடை திட்டத்தை தனியார் மயமாக்குவது மக்கள் விரோத முடிவு : பெ.சண்முகம் கண்டனம்!
-
தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
கோவை முதல் திருப்பூர் வரை சாலைகளின் இருபுறமும் தடுப்புகள்! - முதலமைச்சர் விஜய் வருகையால் மக்கள் அவதி!
-
இனி இந்த அரசு ‘தமிழக வாபஸ் கழக அரசு’ என்று அழைக்கப்படும்! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!