Tamilnadu
பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்பை அறிவித்த தமிழ்நாடு அரசு : பரிசுத் தொகுப்பில் என்ன இருக்கும்?
2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இவர்களுக்கு எல்லாம் மூளை இருக்கிறதா?” : மாணிக்கம் தாகூர், ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“TVK Bad Party அல்ல, Breaking Bad Party”: தவெக MLA 135KG மெத்தம்பெட்டமைன் கடத்தல் -மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
-
போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!
-
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!