Tamilnadu
“இனி எப்போதும் அவர் செருப்பு அணிய முடியாது” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
சென்னை காமராஜர் சாலை தீவு தொடரில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 3.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீவுத்திடல் இடத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.145 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய கட்டிடம் அமைக்கும் பணியானது நடைபெற்ற வருகிறது.
குறிப்பாக இந்த கட்டிடத்தில் இயற்கை வனப்புடன் கூடிய நவீன நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்கம், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகள் கொண்ட கட்டிடம் இடம் பெறவுள்ளது.
குறிப்பாக தீவுத்திடலில் இதற்காக 1.60 லட்ச சதுர அடி பரப்பளவில் 40 கடைகள், 200 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதே போல் இந்த கட்டிடத்தில் 90 கழிவறைகள் கட்டப்பட உள்ளது. குறிப்பாக திருநங்கைகளுக்கென தனி கழிப்பறை வசதியும் இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் இதற்கான பணிகள் நடைபெற்று வரக்கூடிய பணிகள் தொடர்பாக சென்னை தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “சென்னை தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுவின் சார்பாக பொருட்காட்சி அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த கட்டுமான பணிகள் நிறைவுபெறும் பொழுது 40 அரங்குகள் சுமார் 1000 சதுர அடி நிலப்பரப்பில் அமைய உள்ளது.
இதன் முதல் தளத்தில் 20 ஆயிரம் சதுர அடிக்கு கண்காட்சியகத்தின் அரங்கமும், 20 ஆயிரம் சதுர அடியில் உணவகமும் அமைய உள்ளது. மேலும் இங்கு வருகைபுரியக்கூடிய பார்வையாளர்களுக்கு ஏற்ப கழிப்பிட வசதியும் குடிநீர் வசதியும் செய்து தருவதற்கான நடவடிக்கைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 400 இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதேபோல் கட்டிடத்தின் முகப்பு 450 அடி உயரத்தில் மிகவும் தொன்மையான கலை நுட்பங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பானது ரூ.110 கோடி மேல் தாண்டும்.
வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் தினமும் கள ஆய்வு மேற்கொண்டு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்த வருகிறார்கள். இந்த பணிகள் முழு உச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிப்ரவரி மாதம் முடிவு பெற உள்ள பணிகள் படிப்படியாக மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ.6000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த பணிகள் ஆனது வடசென்னை வளர்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட விவகாரத்தை பொறுத்தவரையில் அவர் தேங்காய் நாரோ அல்லது தோளினாலோ ஆன சாட்டையில் அடித்துக் கொள்ளவில்லை. மாறாக பருத்தி பஞ்சினால் தயாரிக்கப்பட்ட சாட்டையினை கொண்டு அடித்துக் கொண்டுள்ளார். பஞ்சால் ஆன சாட்டையால் அடித்துக் கொண்ட விவகாரம் என்பது வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செய்த ஒன்று தான்.
மேலும் அண்ணாமலை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, இனி எப்போதும் அவர் நிச்சயமாக காலில் செருப்பு அணிய முடியாது. ஏனெனில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்.” என்றார்.
Also Read
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!