Tamilnadu
”தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம் மகாராஷ்டிரா அல்ல” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு!
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் 80 ஆம் ஆண்டு விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,”இந்தியாவின் பொருளாதாரத்தில் முதன்மை மாநிலம் மகாராஷ்டிரா என்பது பொய்யான தகவல். மும்பை எடுத்து விட்டால் அங்கு ஒன்றுமில்லை. தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம். பெண்கள் அதிகம் அளவில் 43% தமிழ்நாட்டில் தான் வேலைக்கு செல்கிறார்கள்.
ஆட்டோமொபைல் உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. நம்முடைய உற்பத்தியை உலக தரத்திற்கு கொண்டு செல்வது இன்றைய மாணவர்கள் கையில் உள்ளது. 35% எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எத்தனை ஆண்டுகளுக்கு அடுத்தவர்களின் காப்புரிமை பெற்ற பொருட்களை தயாரித்துக் கொடுக்கப் போகிறோம். நமது ஐபோன், நமது கூகுள் போன்று எப்போது நாம் ஒன்றை உருவாக்க போகிறோம்?. மாணவர்கள் வெறும் டிகிரியை மட்டும் முடித்துவிட்டு செல்லக்கூடாது. ஆய்வுகள் நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.நம்முடைய உற்பத்தியை உலக தரத்திற்கு கொண்டு செல்வது இன்றைய மாணவர்கள் கையில்தான் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
”திருவள்ளுவரை அவமதிப்பது மன்னிக்க முடியாத செயல்” : ஆர்.என்.ரவிக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்!