Tamilnadu
ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை 7 இலட்சம் லிட்டர் அதிகரிப்பு - அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம் !
திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து ஆவின் நிறுவனத்தின் பால் விற்பனை 7 இலட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது கழக ஆட்சியின் கீழ் ஆவின் நிறுவனத்தின் சாதனையாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையான நிலையில் தற்போது 2024-2025 இல் சுமார் 7 இலட்சம் லிட்டர் அதிகரித்து 30 இலட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது.
மேலும் அனைத்து மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் உடல்நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டிசெறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில் புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் சோதனைஅடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!