Tamilnadu

ரூ.2,000 ஃபெஞ்சல் புயல் நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்! : தமிழ்நாடு அரசு தகவல்!

தமிழ்நாட்டில் நவம்பர் 26 ஆம் நாள் முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல்புயலின் காரணமாக கடுமையான மழைப்பொழிவு விழுப்புரம் , கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடிப்படையில் ரூ.2000/- வழங்கிட உத்தரவிடப்பட்டது.

இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டையை காண்பித்து ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது குறித்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் நிவாரண தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் (விழுப்புரம் / கடலூர்) மண்டல இணைப்பதிவாளர் அளவில் தொகை வழங்கப்படவுள்ள தேதியினை முடிவு செய்து டோக்கன்களை 05.12.2024 முதல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல் நாள் முற்பகல் 50 பேருக்கும், பிற்பகல் 50 பேருக்கும் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கவும், இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 100 பேர் மற்றும் பிற்பகல் 100 பேர் என 200 பேருக்கு நிவாரணத் தொகை விநியோகிக்க ஏதுவாக டோக்கன்கள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விற்பனையாளர்கள் டோக்கன்களில் நிவாரணத் தொகை பெற நியாயவிலைக் கடைகளுக்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி வீடுகளுக்கு நேரடியாக சென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டோக்கன்களை விநியோகிக்கும் 05.12.2024 முதல் வழங்கிடும் போது இதற்கென மண்டல படிவத்தில் குடும்ப இணைப்பதிவாளர்களிடம் தொடர்புப்பட்டுள்ள அட்டைதாரரிடமோ அவர்களது குடும்பத்தில் உள்ள நபரிடமோ ஒப்புகை பெறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டோக்கன்கள் வழங்கப்படும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்த்திடவும், எவ்விதமான இடர்பாடுகளும், ஏற்படாத வண்ணமும், புகாருக்கு இடமின்றியும் வழங்கப்படுவதை காவல்துறையுடன் ஒருங்கிணைந்து மண்டல இணைப்பதிவாளர் தக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தி - ஒப்புயர்வு மைய சேவைகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!