Tamilnadu
தொலைக்காட்சியில் கோரிக்கை... உடனடி நடவடிக்கை எடுத்த அரசு : பள்ளி மாணவி தொடங்கி வைத்த புதிய பேருந்து சேவை!
திண்டிவனம் அருகிலுள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற 8-ம் வகுப்பு மாணவி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பாடி பலரின் பாராட்டுகளையும் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "அம்மணம்பாக்கத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே இருப்பதால், மேல் படிப்பதற்கு 5 கி.மீ பயணித்து அனந்தமங்கலம் பகுதியில் இருக்கிற பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பஸ் வசதிகள் இல்லாததால் தினமும் 5 கீ.மி நடந்து சென்று வீடு திரும்பவேண்டியுள்ளது" என்று கூறினார்.
இந்த நிகழ்வு முதலமைச்சரின் கவனத்துக்கு வந்த நிலையில், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது அந்த வழி தடத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அந்த பேருந்து சேவையை இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி தர்ஷினியே கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இது குறித்து அமைச்சர் சிவசங்கர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "சமீபத்தில் இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷினி என்ற மாணவி, பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு 5 கி.மீ தூரம் நடந்து செல்வதை சொன்னதை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், அம்மணம்பாக்கம் கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வரை வழித்தடத்தில் பேருந்து சேவையினை, பள்ளி மாணவி தர்ஷினி கொடி அசைத்து துவக்கி வைத்தார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!