Tamilnadu
“டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித் தீர்மானம்!” : சட்டப்பேரவைக் கூட்டம் எப்போது?
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9ஆம் நாள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்த விரிவான விளக்கத்தை இன்று (டிசம்பர் 2) தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்திய பிறகு தெரிவித்தார் சபாநாயகர் அப்பாவு.
சபாநாயகர் அப்பாவு தலைமையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9 மற்றும் 10 நாட்களில் நடைபெறும்” என தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 9ஆம் தொடங்க உள்ள நிலையில், அன்றைய நாள் மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது!” என உறுதியளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
1. இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா, சம்பந்தன்.
2. மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி.
3. இராணுவ முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் எஸ். பத்மநாபன்.
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.
5. ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் மற்றும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம்
6. பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.
7. தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி. சங்கர்.
8. முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கான இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!