Tamilnadu
”ஆயுள், மருத்துவக் காப்பீட்டின் மீதான GST வரியை நீக்குக”: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் MP வலியுறுத்தல்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய நாடாளுமன்றத்தில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் MP வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி திமுக எம்.பி. தயாநிதி மாறன், ”தனி நபர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் . குறைந்தபட்சம் மூத்த குடிமக்கள் மற்றும் தனிநபர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடுகளுக்கு வரிநீக்கம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜிஎஸ்டி குறைப்பினால் பிரீமியம் விகிதங்களில் மாற்றம் ஏற்படும்போது தொடர்புடைய நிறுவனங்கள் அதை நுகர்வோருக்கு முறையாக வழங்குகின்றனவா என்பதை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உறுதிசெய்யவேண்டும் என்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டியை நீக்குவதன்மூலம் எல்லோருக்கும் சமமான சுகாதார பாதுகாப்பு கிடைக்க அரசு வழிசெய்ய இயலும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !