Tamilnadu

ஃபெங்கல் புயல் உருவானது : எப்போது எங்கு கரையை கடக்கிறது?

வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றது. இது 30.11.2024 அன்று பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில், 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.

இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன்றில் இருந்து டிச.5 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.