Tamilnadu
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி ஏலக்கண்ணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இதற்கிடையில் செல்லமுத்துவுக்கு கடந்த ஐந்து வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி கணவன் உடலை கட்டிப்பிடித்து எழுதுள்ளார். அப்போது கணவன் இழந்த சோகத்தில் அவரும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து தந்தையும், தாயும் மரணமடைந்ததை கண்டு அவர்களது குடும்பத்தினர் பேரதிர்ச்சிக்குள்ளாகினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டனந்தல் கிராமத்தில் நள்ளிரவில் கணவன் இறந்த அரை மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!