Tamilnadu
சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட விண்ணப்பிக்கலாம்! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை மாநகரின் தொன்மையான கட்டிடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ, அல்லது கல்வி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மூலம் commcellgcc@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9445190856 என்ற தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை ரிப்பன் மாளிகையை வெளியிலிருந்து மட்டுமே பார்த்தவர்களுக்கு, அதன் உள் சென்று காண வேண்டும் என்ற நெடுநாள் எண்ணம் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!