Tamilnadu
காவலர் பரந்தாமன் மறைவு - ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதலமைச்சர் இரங்கல்!
மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக மயிலாடுதுறை மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்துவந்தவர் காவலர் பரந்தாமன்.
இவர் நேற்று (அக்டோபர் 27) பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் பெரம்பூர் காவல் சரகம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து முதலமைச்சர், “காவலர் பரந்தாமன் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். காவலர் பரந்தாமன் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவலர் பரந்தாமன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Also Read
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!