Tamilnadu
“படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவுக்கு ஒரு தளம்..” - ‘முதல்வர் படைப்பகம்’ வரும் 4-ம் தேதி திறப்பு!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அந்த வகையில் குக்ஸ் ரோட்டில் உள்ள பெரம்பூர் சப்வே, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கொளத்தூர் பகிர்ந்த பணியிடம் மற்றும் பெரம்பூர் ஐசிஎப் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் கொளத்தூர் தொகுதியில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளையும், பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு சொந்த முயற்சியால் பல்வேறு நலத்திட்டங்களையும் முதலமைச்சர் தொடர்ந்து செய்து வருகிறார்.
குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மறைந்த மாணவி அனிதா பெயரில் கட்டணமில்லா கணினி பயிற்சி மையத்தை உருவாக்கினார். அங்கு பயிற்சி முடித்தவுடன் இலவசமாக மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தையல் பயிற்சி மையத்தை தொடங்கி பல பெண்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருபவர் நம்முடைய முதல்வர்.
அனிதா கணினி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் வரும் 105 பேருக்கு சான்றிதழ்களையும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 360 மகளிர்க்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை வரும் 4ஆம் தேதி முதலமைச்சர் வழங்க உள்ளார்.
மேலும் சென்னையில் முதல்முறையாக கொளத்தூர் தொகுதியில்தான் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையம் பகிர்ந்த பணியிடம் (co working center) உருவாக்கப்பட்டுள்ளது இதற்கு முதலமைச்சர் படைப்பகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் படைப்பகத்தை வரும் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆலோசனை மையம், நூலகம் அமைக்கப்பட்டுள்ளது, மாணவ செலவங்களுகு முதல்வர் படைப்பகம் அர்ப்பணிக்க பட உள்ளது, குறைந்த கட்டணத்தில் இங்கு படிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!