Tamilnadu
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளும் விடுமுறை... தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இந்த நிலையில், இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது"என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!