Tamilnadu
அம்மா உணவகங்களில் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு! : சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கை!
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அக்டோபர் 15ஆம் நாள் அதிகனமழை பெய்தது.
இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் நீரில் சூழ தொடங்கியது. எனினும், தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளாலும், தடுப்பு நடவடிக்கைகளாலும், நிலைமை 24 மணிநேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும், சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல துறைகள் சார்பில், மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
அதன் ஒரு பங்காக, அக்டோபர் 15,16 நாட்களில், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அம்மா உணவங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய (அக்டோபர் 16) மட்டும், அம்மா உணவகங்களில், சுமார் 1,08,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
இது குறித்து, செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மக்கள், தாங்கள் பெருமகிழ்வு கொண்டதாகவும், தக்க நேரத்தில் உறுதுணையாக இருந்த அரசிற்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!