Tamilnadu
”ஜல்ஜீவன் திட்டத்திலும் ஒன்றிய அரசு பாரபட்சம்” : அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!
”ஜல்ஜீவன் திட்டத்தில் ஒரு ரூபாய் செலவு என்றால் 25 காசு தான் ஒன்றிய அரசு நமக்குத் தருகிறது. மீதி ரூபாயை தமிழ்நாடு அரசுதான் கொடுக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்திற்கு நிதி கிடைத்தவுடன் 16 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கேன்.என்.நேரு," தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றும்போது 628 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் எடுக்கப்பட்டு 4.28 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளில் 7.25 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஜல்ஜீவன் திட்டத்தில் ஒரு ரூபாய் செலவாகிறது என்றால், அதில் 25 காசுதான் ஒன்றிய அரசு நமக்குத் தருகிறது. மீதியை தமிழ்நாடு அரசுதான் தருகிறது. ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் நிதி கிடைத்தவுடன் கூடுதலான 16 புதிய குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படும்.
மதுரை நகர் பகுதியில் ரூ 1800 கோடி செலவிலும், மதுரை புறநகர் பகுதியில் 3000 கோடி செலவிலும் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துவக்கிவைக்க இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!