Tamilnadu
பண மோசடி வழக்கு : 2 ஆவது முறையாக அ.தி.மு.க நிர்வாகி கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரிடம் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 2021 ஆம் ஆண்டு, அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ரவீந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து விஜய நல்லதம்பியை போலிஸார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய நல்லதம்பி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் நிபந்தனையை மீறி செயல்பட்டதால், கடந்த செப்டம்பர் 19 ம் தேதி இவருடைய முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் தலைமாறைவானார்.
இந்நிலையில், சிவகாசி அருகே மாரநேரியில் பதுங்கியிருந்த நல்லதம்பியை இன்று மீண்டும் 2வ து முறையாக விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான விஜய நல்லதம்பி அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !