Tamilnadu
சென்னை விமான நிலைய பயண நேரம் மாற்றம் : அக்டோபர் 1 முதல் 8 வரை அமலில் இருக்கும் என தகவல்!
இந்திய விமானப்படை நாளையொட்டி 21 ஆண்டுகளுக்குப் பின்பு, சென்னை கடற்கரையில், வரும் அக்டோபர் 6ஆம் நாள் காலை 11 மணியிலிருந்து பகல் 2 மணி வரையில், விமானப்படையின் 72 விமானங்கள் மூலம் வீர சாகசங்கள் செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை இந்த வீர சாகச நிகழ்ச்சிகளை இலவசமாக கண்டு கழிக்கலாம் என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. அதற்கு வரும் அக்டோபர் 1ஆம், நாள் முதல் ஒத்திகைகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது வந்து சேரும் விமானங்கள், இந்திய விமானப்படையின் இந்த வீர சாகச நிகழ்ச்சிக்கு, இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது வந்து சேர்வது ஆகியவைகளில் சில மாற்றங்களை, இந்திய விமான நிலைய ஆணையம் செய்துள்ளது.
அதன்படி, இன்று (அக்டோபர் 1) பகல் 1:45 மணி முதல், மாலை 3:15 மணி வரையில், சென்னை விமான நிலையம் மூடப்படும். இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எந்த விமானங்களும் புறப்படவும் செய்யாது. அதேபோல் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கவும் செய்யாது.
மேலும் அக்டோபர் 2, 3, 5,6,7 மற்றும் 8 ஆகிய நாள்களில், சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நிறுத்தப்படுவது, கூடுதல் இடைவெளிகளில் நிறுத்தப்படும்.
எனவே இந்த தேதிகளில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, உங்களுடைய விமானங்கள், எப்போது சென்னைக்கு வந்து சேரும். சென்னையில் இருந்து, எப்போது புறப்பட்டு செல்லும் என்ற கால நேரத்தை முன்னதாகவே தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை 21 ஆண்டுகளுக்குப் பின்பு சென்னையில் நடத்த இருக்கும் இந்த வீர சாசக விமான படை விமானங்களின் வீர சாகச நிகழ்ச்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில், சென்னை விமான நிலையம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!