Tamilnadu
எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் 22.9.2024 காலமான அன்று மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்திற்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார்.
இன்று (26.9.2024) சென்னை, கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!