Tamilnadu
கிண்டியில் நீர்நிலை உருவாக்கினால், வெள்ள பாதிப்பைக் குறைக்கலாம்!: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து!
கிண்டி ரேஸ் கிளப் நிலம் கையகப்படுத்தலுக்கு பிறகு, அங்கு பிரம்மாண்டமான பூங்கா மற்றும் பசுமை வெளி அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அவ்வாணையை அடுத்து, கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் அமைய இருக்கும் பசுமை பூங்காவை, நீர் நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரைச் சேமிக்க முடியும் மற்றும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க இயலும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.
வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை இன்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் (upstream) பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா? அல்லது ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா? என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டும் இருப்பதாகக் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட தீர்ப்பாயம் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர் நிலையாக மாற்றுவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரியப்படுத்துமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!