Tamilnadu
கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே குச்சிப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஏரி மண் எடுப்பது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் என்பவருக்கு புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து அசோக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் முறையாக பதில் எதுவும் சொல்லாமல் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முருகன் மீது கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முருகன் பா.ஜ.க கள்ளக்குறிச்சி மாவட்ட ஓபிசி அணி மாவட்ட துணை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!