Tamilnadu
“சம உரிமை கொள்கையைக் கொண்டு 75 ஆண்டுகளாக செயல்படும் தி.மு.க!” : அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்!
தி.மு.கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு, தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் ஆகிய மூன்று சிறப்புகளையும் உள்ளடிக்கிய மாபெரும் விழா, சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 75ஆண்டுகளாகியும், இன்றும் ஆட்சியில் இருக்கும் கொள்கை இயக்கமாக தி.மு.க விளங்கி வருகிறது என்ற பெருமைக்குரிய வரலாற்றை, தி.மு.க தலைவர்கள் முன்மொழிந்தனர்.
அவ்வகையில், சிறப்புரை ஆற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “பல நாடுகளில் பல விதமான போராட்டங்கள், மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்கள், வேலைவாய்ப்பு கேட்டு போராட்டங்கள், நில வரி தொடர்பான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், சுயமரியாதை கோரி போராட்டம் நடத்திய இயக்கம், திராவிட இயக்கம். அதனால் தான், இன்றும் கொள்கை மாறாமல் செயல்பட்டு வருகிறோம்.
பவள விழா கொண்டாடும் தி.மு.க என்ன சாதித்தது என்று கேட்டால், இடுப்பிலே கட்டிய துண்டை, தோளில் போட வைத்திருக்கிறது. செருப்பு போட வைத்திருக்கிறது, கோவிலுக்குள் நுழைய வைத்திருக்கிறது.
எனினும் கூட, தற்போதைய அரசியல் சூழல் சற்று கவனிக்க வேண்டியதாய் அமைந்துள்ளது. இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு ஒரு கமிட்டி அமைத்து, தற்போதைய வரலாற்றில் இருக்கிற திராவிட கருத்துகளை, ஆரிய கருத்துகளாக மாற்றி அமைத்து வருகிறது. இக்கமிட்டியில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் பார்ப்பனர்கள் தான். வேறு எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒடுக்குமுறை இன்றும் மறைமுகமாக தொடர்ந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது, தி.மு.க.விற்கு உள்ளது” என்றார்.
மேலும், “அமெரிக்காவிற்கு சென்று, தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திவிட்டு வந்திருக்கிறீர்கள். அந்த காட்சியை, என் தலைவர் கலைஞர் இருந்திருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எனக்கு தெரியும்” என நெகிழ்வடைந்தார்.
Also Read
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - முதலமைச்சர் கோரிக்கை!
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !