Tamilnadu
"ஆளுநர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்" : சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எச்சரிக்கை!
தமிழ்நாடு அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ”நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.727 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஏற்கனவே ரூ.302 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் ரூ. 54 கோடி கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சாவர்க்கர் வரலாறு இல்லாததால் ஆளுநர் குறை சொல்கிறார். சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது மூன்று முறை ஆங்கிலேயேர்களுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தும் அது ஏற்கப்படாத நிலையில், நான்காவது முறையாக மன்னிப்பு கடிதம் கொடுத்து சிறையில் இருந்து விடுதலையானவர். ஆங்கிலேயே ஆட்சியின் சாதனையை எடுத்துச் சொல்ல ஊதியம் வாங்கியவர் சாவர்க்கர்.
இந்த வரலாற்றை தான் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். ஆனால் சுதந்திரத்திற்கான தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து போராடிய வ.உ.சி போன்ற சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம்.
புதிய கல்விக் கொள்கை மூலமாக மீண்டும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சனாதன சித்தாந்தத்தை கொண்டுவர பார்க்கிறார்கள். 10% பேர் மட்டும் படிக்க வேண்டும் 90% பேர் படிக்கக் கூடாது என ஆளுநர் ஆசைப்படுகிறார் . தமிழ்நாடு அரசு பள்ளிகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!