Tamilnadu
சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு : ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு !
இந்தியாவில் சாலைகள் 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பின்னர், அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
ஆனாலும் ,ஒன்றிய அரசு சுங்க கட்டண தொகையை அதிகரித்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழத்தில் உள்ள ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீதம் உலா 25 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையார்கள் அறிவித்துள்ளனர்.
வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தையும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் உயர்த்தி உள்ளனர்.
மேலும் இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இப்போது உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தையும் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!
-
”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
பசிப்பிணி மருத்துவராக காலை உணவின் கதிரவனாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் : முரசொலி!
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்