Tamilnadu
“இந்த சாத்தியத்துக்கு காரணம் திராவிட மாடல் அரசுதான்” : அமைச்சர் பொன்முடி பெருமிதம் !
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக முதல் விண்வெளி தின விழாவையொட்டி பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் மற்றும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இயக்குனர் லெனின் தமிழ்கோவன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்
அப்போது நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி உரையாற்றியதாவது, “அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் போதே அறிவியல் சிந்தனையும் வளர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். படிக்கும் போதே கேள்வி கேட்க வேண்டும் அதுதான் அறிவியல்.புத்தக பூச்சியாக இருந்து விட கூடாது. அறிவியல் ரீதியாக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். 1980 ல் அறிவியல் தொழில்நுட்பம் மையம் தொடங்கப்பட்டது. 1990ல் கலைஞர் அவர்களால் பெரியார் தொழில்நுட்ப மையம் என பெயர் சூட்டினார். சென்னை,திருச்சி,கோவை ஆகிய மூன்று இடங்களிலும் இந்த அறிவியல் தொழில்நுட்பம் மையம் உள்ளது.
ஆரம்பகல்விக்கு வித்தட்டவர் காமரஜர் உயர்கல்விக்கு வித்திட்டவர் கலைஞர் கருணாநிதி. அன்று இருந்த அறிவியல் வளர்ச்சி வேறு இன்று அறிவியல் வளர்ச்சி வேறு. செல்போன் மூலம் அறிவியலை வளர்க்க வேண்டும்.சூரியன், சந்திரனுக்கு நபர்கள் செல்கிறார்கள் என்றால் அதுதான் அறிவியல்.
நமக்கு பின் வரும் பேரன், பேத்திகள் எல்லாம் சந்திரனில் குடியேறினாலும் அது ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. விண்வெளியில் மிகச்சிறந்தவன் தமிழன் இருக்கிறான் என்றால் அதும் எங்க ஊரை சார்ந்தவர் என்றால் பெருமையாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி இருக்க வேண்டும் அது தவறில்லை. அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும்.
செல்போன் மூலம் அறிவியலை கற்க வேண்டும். பகுத்தறிவு அடிப்படையில் வளர்வது தான் அறிவு.கேள்வி கேட்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர் பாடம் படிக்கும் போது கேள்வி கேட்க வேண்டும். நானும் ஆசிரியராக இருந்தவர். ஒரு காலத்தில் சந்திரன், சூரியன் எதை சுற்றி வருவது என்பது தெரியாது. சூரியன், சந்திரனை பார்த்து வழிபட்டார்கள். ஆனால் அது தவறில்லை.
இப்போது இருக்கிற நிலையை பார்த்தால் மக்கள் தொகை அதிகரிப்பை அடுத்து வேறு கிரகத்தில் குடியேறும் நிலை வரும். வீரமுத்து வேல் விழுப்புரத்தை சேர்ந்தவர். விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறார். அவர் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். எனக்கே செல்போனில் உள்ள முழுமையான விஷயங்கள் தெரியாது. ஆனால் என் பேரன்களுக்கு எல்லாம் தெரியுது. அதுதான் அறிவியல் வளர்ச்சி. இப்போது ஸ்மார்ட் போன் மூலம் கல்வி கற்கப்படுகிறது.
முதலமைச்சர் தொழில் துறையில் வெளிநாடுகளில் இருக்கும் தொழில் நுட்பங்களை இங்கு கொண்டு வந்து மேம்படுத்துவதற்காக தான் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சந்திரன் மற்றும் சூரியனை ஆராய்ச்சி செய்வது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி. அடிப்படை கல்வி தான் முக்கியம். நான் முதல்வன் திட்டம் எல்லா பல்கலைக்கழகம், கலை, அறிவியல் கல்லூரி, பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் திட்டம் வேலை தேடும் திட்டம் இல்லை. நீங்களே வேலை கொடுக்கும் திட்டம். புதுமைப்பெண் திட்டம் போன்று தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த காலத்தில் பெண்கள் வயதுக்கு வந்தால் வீட்டை விட்டு வர கூடாது, சமையல் மட்டுமே செய்ய வேண்டும் என இருந்தது. தற்போது அந்த நிலை மாறி உள்ளது.
ஆணும் பெண்ணும் சமம். அனைவரும் படிக்க வேண்டும். நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது 16 பேரில் ஒரே அதில் ஒரே ஒருவர் தான் பெண். ஆனால் தற்போது அதே ஊரில் தற்போது மகளிர் பள்ளியில் பிளஸ்-2 வில் 460 பெண்கள் படிக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். இது சாத்தியமாக திராவிட மாடல் அரசே காரணம்" என்றார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!