Tamilnadu
ரூ. 80 கோடியில் புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் - ஜனவரியில் திறப்பு விழா! : அமைச்சர் எ.வ. வேலு தகவல்!
சென்னை வள்ளுவர் கோட்டம் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 50 ஆண்டுகளை நெருங்கும் வள்ளுவர் கோட்ட கட்டடத்தில், தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புனரமைக்கப்பட்டு வரும் வள்ளுவர் கோட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு,
வள்ளுவர் கோட்டம் இன்று உள்ள நவீன யுக்தியை பயன்படுத்தி புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் பல்வேறு தனியார் கட்டட கலைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு நிலையில் ஆய்வு செய்து , 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இப்பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
மாலை நேரங்களில் சென்னை மக்கள் வள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறப்பு உணவகம் அமைக்கப்பட உள்ளது.
புதிய யுக்தியை பயன்படுத்தி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. கூட்ட அரங்கம் 1400 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் அளவிற்கு மிகப்பெரிய குளிர்சாதன கூட்டு அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் பெரிய அரங்கமாக இது அமைய உள்ளது. குறல் மண்டபம் புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயிரம் வண்டிகள் நிறுத்துவதற்கான மல்டி பார்க்கிங் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
முத்தமிழறிஞர்கள் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில் கல் தேர் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. கல் தேரை வண்ணம் பூசி மின்விளக்குகள் அலங்கரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட வரும் கட்டிடங்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த கட்டட கலையை மு. க ஸ்டாலின் கட்டட கலை என்று சொல்லும் அளவிற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது
புதிய தொழில்நுட்பத்தையும் நவீன யுத்தியுடன் கட்டப்பட்டு வரும் வள்ளுவர் கோட்டத்தை சென்னை மக்களும் உலக மக்களும் பாராட்டும் வகையில் அமையும்.
Also Read
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!