Tamilnadu
ஆம்ட்ராங் கொலை வழக்கு : தலைமறைவாக இருந்த பா.ஜ.க பிரமுகர் கைது - தீவிர விசாரணை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்றுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பணம் கைமாறியுள்ளதாக போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ், மலர்கொடு, ஹரிஹரன் ஆகிய மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மலர்கொடு சென்னை திருவல்லிக்கேணி மேற்குப் பகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஹரிஹரன் த.மா.கா.வில் மாநில மாணவரணி துணைத் தலைவராக உள்ளார்.
மேலும் இதில் பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அஞ்சலையை நேற்று தணிப்படை போலிஸார் கைது செய்தனர். அதோடு ரூ.50 லட்சம் வங்கிப் பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் அஞ்சலைக்கு சொந்தமான 2 வங்கிக் கணக்குகள் ஆய்வு தனிப்படை போலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!