Tamilnadu
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பா.ஜ.கவின் 10 ஆண்டுகால ஆட்சி : திருச்சி சிவா MP குற்றச்சாட்டு!
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பாரதிய ஜனதா கட்சி பிரகடனப் படுத்தி உள்ளதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் குடியரசுத் தலைவர் உரையாற்றிய நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய திருச்சி சிவா, அவசர நிலை குறித்து குடியரசுத் தலைவர் என்று பேசியுள்ளார். அவசர நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி திராவிட முன்னேற்ற கழகம் எனவும் அவசர நிலை நாட்டில் பிரகட னப்படுத்த ப்பட்டது என்பது மறைக்கப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவசரநிலை அவை என்றால், கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை செயல்பாட்டில் உள்ளதாகவும், மத்திய அமைப்புகள் மூலமாக எதிர்கட்சியினர், முக்கிய அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவதும் சிறையில்அடைக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் என அறிவிக்கப்படாத அவசர நிலையை பாஜக கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இனிமேல் அவசர நிலை வரவே கூடாது என பாரதிய ஜனதா கட்சி எண்ணுகிறது என்றால் அவசர நிலையின் போது செய்யப்பட்ட மாற்றங்களை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும் எனவும், குறிப்பாக மாநில பட்டியலில் இருந்த கல்வியை அவசர நிலையின் போது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும், ஏன் அதனை மீண்டும் மாநில பட்டியலுக்கு பாரதிய ஜனதா கட்சி மாற்ற முன்வரவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இன்று குடியரசுத் தலைவர் உரை ஆளும் அரசாங்கம் எழுதிக் கொடுத்த உரை எனவும் அதிலும் குறிப்பாக பெரும்பான்மை பெற்ற அரசாங்க ஒன்றிய அரசு உள்ளது என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டது அதிகம் சிரிப்பை ஏற்படுத்துவதாக கிண்டல் அடித்தார். அறுதி பெரும்பான்மை கூட இல்லாத கட்சியாக பாஜக வெற்றி பெற்றுவிட்டு கூட்டணிக் கட்சிகளின் தயவோடு ஆட்சி அமைத்துள்ள அவர்கள் பெரும்பான்மை பெற்ற கட்சி என நாடாளுமன்றத்தில் சொல்கிறார்கள் எனவும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!