Tamilnadu
ரூ.3 கோடியில் கைத்தறி உபகரணங்கள் : நெசவாளர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஆர். காந்தி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கைத்தறி மற்றும் துணி நூல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1.ரூ.20 கோடியில் 10 புதிய கைத்தறிக் குழுமங்கள் (New Handloom Clusters) 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும்.
2.ரூ.1.50 கோடியில் வேலூர் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் 2 சாயச் சாலைகள் (Dye Houses) அமைக்கப்படும்.
3.ரூ.3 கோடியில் 3,000 கைத்தறி நெசவாளர்களுக்கு தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் (Looms and Accessories) வழங்கப்படும்.
4. தேசிய மற்றும் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகள் நடத்தப்படும். ரூ.2 கோடியில் சென்னைதீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறிக் கண்காட்சியும், ரூ.1.20 கோடியில் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய 4 இடங்களில் மாநில அளவிலான கைத்தறிக் கண்காட்சிகளும் நடத்தப்படும்.
5.ரூ.66 இலட்சத்தில் இராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் புதிய கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படும்.
6.தமிழ்நாட்டில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 10% அகவிலைப்படி (D.A) உயர்த்தி வழங்கப்படும் !
7.கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.
8.நெசவாளர்களிடையே பிற மாநில நெசவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.50 லட்சத்தில் விழிப்புணர்வு பயணத்திட்டம் செயல்படுத்தப்படும்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!